Saturday, August 27, 2016

E=MC2 உணர்த்துவது என்ன?



இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் பல முறை பாட புத்தகத்தில் படித்திருக்கின்றேன். மதிப்பெண் வாங்குவதற்கு மட்டுமே அதை படித்தேன். ஒரு முறை கூட ஆழ்ந்து படித்தது இல்லை. நேற்று அந்த சமன்பாட்டை சற்று ஆழமாக படித்தேன். அதன் சாராம்சம் என்னை வியக்க வைத்தது.

சிறு வயதில், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஸ்தூல வடிவிலானவை (Matter) என்றும் அவை Solid, Liquid & Gas என்று வெவ்வேறு தன்மையில் இருக்கின்றது என படித்திருக்கின்றேன். அந்த கோட்பாட்டை மற்றோரு கோணத்தில் E=mc2 விளக்கியிருக்கின்றது.

அதாவது E=mc2 எனும் சமன்பாடு, சக்தி மற்றும் ஸ்தூல த்துக்கும் (Physical substance) ஆனா இணையுறவை (Relationship) விளக்கியிருக்கின்றது. ஐன்ஸ்டீன், இந்த சமன்பாட்டில் மூலம் சக்தி மற்றும் ஸ்தூலம் இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார். என் உடலும், கருங்கல்லும்  ஒரே சக்தியின் வெளிப்பாடுகள் தான். இந்த  இரண்டு
சக்திக்கும் வேறுபாடு என்னவென்றால் இரண்டும் வெவ்வேறு  அலைவரிசையில் (Frequency) இயங்கி கொண்டு இருக்கின்றன. ஆகா எல்லாம் சக்தி மயம்தான் .

இந்த கலாச்சாரத்தில், "அஹம் ப்ரஹ்மாஸ்மி " என்ற ஒரு சொற்றோடர் வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், "உன்னுள் தெய்வீகம் இருக்கிறது" என்பதாகும். இது எப்படி சாத்தியம் ?

நம் உடலை சற்று கூர்ந்து கவனித்தால் இரண்டு விசயம் புலப்படும். ஒன்று  ஸ்தூல வடிவத்தில் இருக்கும் நம் உடல் மற்றும் மனம் . இரண்டு, சூச்சம (Subtle) வடிவத்தில் இருக்கும் நம் ஆன்மா. இதை ஆங்கிலத்தில் Consciousness என்று சொல்லலாம்.  ஐன்ஸ்டீன் கூற்றின் படி இந்த இரண்டும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகள் தான்.

நம் முன்னோர்கள் இந்த இரு சக்திகளும் ஒரு ஒத்திசையில் (Rhythm) இயங்கும் போது தெய்வீகம் வெளிப்படும் என்று கூறுவர். அது எப்படி ? இதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

ஒரு பூவை தனி தனி யாக கூறுபோட்டு பார்க்கும் பொது,  உணர முடியாத ஒன்றை முழுமையாக பார்க்கும் பொது உணர முடியும். அது என்னது ?

.......
.......

அது தான் அழகுணர்ச்சி . அது போல உடல்-மனம் என்கின்ற சக்தியும் ஆன்மா என்கின்ற சக்தியும் ஒரு ஒத்திசையில் இயங்கும் போது தெய்வீகம் வெளிப்படும். இந்த ஒத்திசைவை  உருவாக்குவதற்கு நம் கலாச்சாரம் பல வழிகள் உருவாக்கியுள்ளன.

அதில் ஒன்று தான்  கோவில். கோவில் என்பது தெய்வீக  சக்தியின் உறைவிடம். அந்த காலத்தில் மக்கள் தினமும் கோவிலுக்கு செல்வார்கள். அங்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு தங்கள் வேலையே பார்க்க செல்வர். இதை தினமும் செய்வதன் மூலம் இந்த ஒத்திசைவு இயற்கையாக வந்து சேரும். பிறகு ஒரு குறிப்பிட்ட வயதில் (Vanaprastha) ஒரு குருவை சந்தித்து முறையாக சில பயிற்சியின்மூலம் தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்வர்.

மற்றொன்று , யோகா அறிவியல் மூலம் இந்த ஒத்திசைவை  உருவாக்குவது.

தெய்வீகம் உணர்வதே இந்த கலாச்சாரத்தின் இறுதி படி. இதை தான்  நம் முன்னோர்கள் முக்தி என்று அழைத்தனர்.  இந்த விசயம் தான் E=mc2 ஆழ்ந்து படிக்கும் போது எனக்கு தோன்றியது

Tuesday, August 23, 2016